உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு| Srivilliputhur |Weavers Hold Innovative Protest | Non-Supply of Yarn

ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு| Srivilliputhur |Weavers Hold Innovative Protest | Non-Supply of Yarn

ஸ்ரீவில்லிபுத்துாரில் பரபரப்பு | Srivilliputhur | Weavers Hold Innovative Protest | Non-Supply of Yarn விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சுந்தரபாண்டியன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மூலம் நூல் வழங்கப்பட்டு வருகிறது. நூலில் தரம் குறைவு குறித்த சர்ச்சை எழுந்தது. அரசு சார்பில் தரம் குறைந்த நூலுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட தரம் வாய்ந்த நூல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய ரகத்திற்கான நூல் வழங்கப்படும் வரை பழைய ரகம் நூல் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நூல் வழங்குவதை நிறுத்தி 2 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய ரகத்திற்கான நூல் வழங்கவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக வேலை இன்றி நெசவாளர்கள் தவிக்கின்றனர். அதிகாரிகளிடம் நூல் கேட்டு போராடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று காலை மாயாண்டி பட்டி தெருவை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நுால் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நெசவாளர்கள் போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு இணை இயக்குனர் ரமேஷ், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

ஜூலை 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !