ஆடி கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் |Grace super market | Nissan auto Relli
தினமலர் நாளிதழ், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, ஆடி கார்னிவெல்-அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர் - கிரேஸ் சூப்பர் மார்க்கெட்(Grace Super Market). அசோசியேட் ஸ்பான்சர் - Nissan auto Relli சென்னை அய்யப்பந்தாங்கல் பாலாஜி அவென்யூவில் உள்ள துலிவ் தக்சின் அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அந்த பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. காலையில், பெண்களுக்கான கோலப்போட்டி மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. மாலையில் டாய் ரயில், ஜம்பிங் பலூன், வாட்டர் மார்க் பெயின்ட், கேலி சித்திரம், ஓவியம், மேஜிக் ஷோ, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. உறியடி, கயிறு இழுத்தல் போட்டிகளில் முதியோர் முதல் குழந்தைகள் வரை பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஷாம் என்பவரின் 38வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.