உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / ஏழை குழந்தைகளின் கல்வி; முதல்வர் அக்கறை காட்டுவாரா? | Women waiting for scholarship | Palladam

ஏழை குழந்தைகளின் கல்வி; முதல்வர் அக்கறை காட்டுவாரா? | Women waiting for scholarship | Palladam

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பெரிய வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராஜன். கைத்தறி நெசவாளர். இவரது மனைவி கனகுமணி வயது 34. மகன் சஞ்சீவ் குமார் வயது 15 மற்றும் மகள் தர்ஷணா 11. 2019 ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் துளசிராஜன் உயிரிழந்தார். அதன்பிறகு வறுமையின் கோரப்பிடியில் கனகுமணி சிக்கினார். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காககணவர் செய்த கைத்தறி நெசவுத் தொழிலை கனகுமணி செய்ய ஆரம்பித்தார். குழந்தைகளின் படிப்பை கருத்தில் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தார். தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க கல்வித்துறை உத்தரவிட்டது. இது தொடர்பாக கல்வித்துறையிடம் இருந்து கடிதம் வந்து 3 ஆண்டாகியும் உதவித்தொகை வந்த பாடில்லை. கனகுமணியை அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை