உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் கூடவே பழகி கதை முடித்த கொடூர பின்னணி | Armstrong case | Rowdy Nagendran son confession

ஆம்ஸ்ட்ராங் கூடவே பழகி கதை முடித்த கொடூர பின்னணி | Armstrong case | Rowdy Nagendran son confession

ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அடுத்தடுத்து 23 பேரை போலீசார் கைது செய்தனர். யாரும் சாதாரணமானவர்கள் அல்ல. அரசியல்வாதிகள், ரவுடிகள், வக்கீல்கள் என எல்லாம் பெரும் புள்ளிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, தமாக என சர்வ கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் கொலை வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் கொலையின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களான காங்கிரஸ் கட்சியின் மாஜி நிர்வாகி வக்கீல் அஸ்வத்தாமன், அவரது தந்தையும் வியாசர்பாடியை கலக்கிய பிரபல ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டனர்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ