டிரம்பை சுட்டது இவரா? குடியரசு கட்சிக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி | Donald Trump | Thomas Matthew Crooks
டிரம்பை சுட்டது இவரா? குடியரசு கட்சிக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி | Donald Trump | Thomas Matthew Crooks அமெரிக்காவில் குடியரசு கட்சி பிரசார கூட்டத்தில் பேசிய போது, அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். டிரம்பின் வலது பக்க காதின் மேல் பகுதி கிழிந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இந்த சம்பவம் புயலை கிளப்பி இருக்கிறது. டிரம்பை சுட்ட ஆசாமியை மறு கணமே அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர். அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இப்போது அவர் யார் என்று தெரியவந்துள்ளது. சுட்ட ஆசாமியின் பெயர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் Thomas Matthew Crooks. அவனுக்கு 20 வயது தான். பென்சில்வேனியா மாகாணம் பெத்தேல் பூங்கா பகுதியை சேர்ந்தவன் என்பதை அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதே பென்சில்வேனியா மாகாணத்தில் தான் டிரம்ப் பிரசார கூட்டம் நடந்தது.