கொடூரத்தில் இருந்து மீளவில்லை; ஓட்டு போடாத பெரும்பத்து மக்கள்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது பெரும்பத்து கிராமம். கடந்த மார்ச் 2ம் தேதி இரவில் 3 டூவீலர்களில் அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல், இந்திரா காலனி டீக்கடை முன் இருந்த மக்களை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியது. மாற்றுத்திறனாளி ஜான் மார்க் (45) மற்றும் ஒடிஷாவை சேர்ந்த திரிநாத் கட்டா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஏப் 24, 2026