உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரெட் அலர்ட்டில் கேரளா: புரட்டியெடுக்கும் கனமழை | Kerala rain | Red alert | Kerala Red Alert

ரெட் அலர்ட்டில் கேரளா: புரட்டியெடுக்கும் கனமழை | Kerala rain | Red alert | Kerala Red Alert

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மே 26 ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அதேபோல திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வானிலை மையம் கணித்தது போலவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோழிக்கோடு தாமரச் சேரி அருகே உள்ள கோடஞ்சேரி பகுதியில் கனமழையால் மின்கம்பி அறுந்து விழந்ததால் ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர். கோழிக்கோட்டில் பலத்த காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து பைக்கில் சென்று கொண்டிருந்த பவித்ரன் என்பவரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இவர்களையும் சேர்த்து கேரளாவில் மழைக்கு இது வரை 9 பேர் இறந்துள்ளனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை மீட்டனர். கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு செவ்வாய்கிழமையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சூர், மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பெரியாறு மற்றும் முத்திரபுழையாறு ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரல்மலையில் மண் சரிவு ஏற்பட்டு 400 உயிர்களை காவு வாங்கிய புன்னம்புழா ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ