பாதிரியாரை கைது செய்யக்கோரி சர்ச்சில் உள்ளிருப்பு போராட்டம்!
கோவையில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் சர்ச்சில் இந்துக்கள் குறித்து பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசியது சர்ச்சையானது. பிரின்ஸ் கால்வினுக்கு எதிராக இந்து அமைப்பினர் கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் புகாா் அளித்தனர். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சா்ச்சைக்குரிய வீடியோவும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. தனது பேச்சுக்கு பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
ஜூலை 05, 2024