உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுரோட்டில் அலறி ஓடிய மாணவன்: நாமக்கலில் அதிர்ச்சி | College Student | Fire

நடுரோட்டில் அலறி ஓடிய மாணவன்: நாமக்கலில் அதிர்ச்சி | College Student | Fire

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் வயது 21. நாமக்கல் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படிக்கிறார். கடந்த வியாழனன்று மாலை நண்பர்களுடன் ராசிபுரம் சென்றுள்ளார். அங்கு மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் கிருஷ்ணகுமார் மட்டும் தனியாக பிரிந்து சேலம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். இரவு 11 மணிக்கு காமாட்சி அம்மன் கோயில் அருகே சென்ற போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி இருக்கிறார். டிரான்ஸ்பார்மர் பெட்டி மீது நின்று அங்கிருந்த மின்கம்பியை பிடித்ததாக தெரிகிறது.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை