புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி பகீர் செயல் | College student | Pregnant
புதுக்கோட்டை பனையப்பட்டியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்ஸ்சிங் படித்து வருகிறார். இவரது தந்தை வெளியூரில் தங்கி வேலை செய்கிறார். தாயுடன் வசித்து வந்த மாணவி வீட்டுக்கு தெரியாமல் இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகினார். அதனால் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வீட்டிலேயே பிரசவம் ஆனது. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் விரக்தியுடன் இருந்தார். வீட்டுக்கு அருகிலேயே குழி தோண்டி குழந்தையை உயிருடன் உள்ளே போட்டதாக தெரிகிறது. குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது குழிக்குள் குழந்தையின் கை தெரிந்துள்ளது.
மே 17, 2025