மற்றொரு அமைச்சரின் தூண்டுதல் என திமுகவினர் புகார்! | DMK | Minister KN Nehru |banners | Tiruchy
நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என் நேருவின் பிறந்தநாள் 9ம் தேதி வருகிறது. திருச்சி மாநகரம் முழுவதும் அவரை வாழ்த்தி திமுகவினர் நேற்று மாலை ராட்சஷ பேனர்களை வைத்தனர். ஆனால் நேற்று நள்ளிரவே இரவோடு இரவாக திருச்சி கமிஷனர் காமினி உத்தரவில் பேனர்கள் அனைத்தும் போலீசாரால் அகற்றப்பட்டது. திருச்சி கோர்ட், எம்ஜிஆர் சிலை, மேஜர் சரவணன் சாலை, கருமண்டபம், பொன்நகர் என நேருவின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக உறுப்பினர்களால் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டது. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தயாராகி வரும் சூழலில் பேனர்கள் அகற்றம் திருச்சி திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சரின் தூண்டுதலின் பேரில் இதனை அரங்கேற்றி உள்ளதாகவும் திமுகவினர் சிலர் சொல்வதாக கூறப்படுகிறது. இந்த வருட பிறந்தநாளை ஆரவாரம் இல்லாமல் அனுசரிக்க அமைச்சர் நேரு தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.