உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்| jagdeep dhankar|vice president| resigns

மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்| jagdeep dhankar|vice president| resigns

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில்,- உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர், அமைச்சர் குழுவுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை. நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். எம்பிக்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும். நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணை ஜனாதிபதியாக எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற அனுபவம், நுண்ணறிவுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !