/ தினமலர் டிவி
/ பொது
/ வடபழநி கோயில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்! Navaratri | Vadapalani Temple | Chennai
வடபழநி கோயில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்! Navaratri | Vadapalani Temple | Chennai
சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா வரும் 3ம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. 3ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கி தினமும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளது. அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கும். நவராத்திரி பத்து நாட்களிலும் தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ரநாம, வேத, திருமுறை பாராயணங்கள், மகளிர் கொலு பாட்டு நடக்க உள்ளது.
அக் 01, 2024