உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாய் கடிக்க பாய்ந்ததால் எஜமானை தீர்த்து கட்டிய வாலிபர் | street dogs | supreme court judgement

நாய் கடிக்க பாய்ந்ததால் எஜமானை தீர்த்து கட்டிய வாலிபர் | street dogs | supreme court judgement

கடிக்க பாய்ந்து வந்த வீட்டு நாய் ஓனரை வெட்டி சாய்த்த இளைஞர் கிருஷ்ணகிரியில் பகீர் சம்பவம் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டதில் இருந்து நாய்களுக்கு எதிராக குரல்கள் வலுத்துள்ளன. வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கும் அண்டை வீட்டார்களால் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாய் கடிக்க பாய்ந்ததால் அதன் ஓனரை கொடூரமாக கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள நார்ப்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (40). விவசாயி. இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் அதே கிராமத்தை சேர்ந்த கவுரம்மா (60) என்ற பெண்ணின் பேரன் முனியேந்திரனை (24) கடிக்க பாய்ந்து வந்தது. முனியேந்திரன் சமயோசிதமாக செயல்பட்டு, கடியில் இருந்து தப்பினார். ஆனாலும் ஆத்திரமடைந்த முனியேந்திரன் கோபால் வீட்டுக்கு சென்றார். போற வர்றவங்களை கடிக்கத்தான் நாய் வளர்க்கிறியா? என கேட்டு கண்டபடி திட்டிவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இது, கோபாலுக்கு அவமானமாகி விட்டது. மது குடித்துவிட்டு முனியேந்திரன் வீட்டிற்கு சென்று அவருடன் மீண்டும் சண்டை போட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. ஆத்திரம் அடைந்த முனியேந்திரன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலை சரமாரி குத்தினார். மார்புக்கு கீழ் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபாலை அவரது உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர் அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கத்தியை மறைத்து எடுத்துச் சென்று கோபாலை கொன்ற குற்றத்துக்காக முனியேந்திரனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட கோபாலுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நாய் கடிக்க வந்த காரணத்துக்காக அதன் ஓனரை இளைஞர் கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ