மோடியின் சைப்ரஸ் பயணத்தின் அசர வைக்கும் பின்னணி | Turkey | PM Modi Cyprus visit 2025
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சைப்ரஸின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் போர் பதற்றம் நிலவும் நிலையில் பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க ஆதரவு அளிக்கும் நாடுகளில் ஒன்று சைப்ரஸ். இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. அதே நேரத்தில் சைப்ரஸ் அருகே உள்ள துருக்கி பாகிஸ்தான் பக்கம் நிற்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் போது பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய நாடு துருக்கி. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. இப்படி பல வழிகளில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கியை ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ள இந்தியா தயாராகிவிட்டது. இதன்முதல் படி தான் பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம். கடைசியாக 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சைப்ரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.