செய்தி சுருக்கம் | 08 PM | 24-12-2024 | Short News Round Up | Dinamalar
வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 30ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
டிச 24, 2024