உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சமூக பதட்டத்தால் மனநலம் பாதிப்பு? தாய், மகளை மீட்க முயற்சி

சமூக பதட்டத்தால் மனநலம் பாதிப்பு? தாய், மகளை மீட்க முயற்சி

கோவை காட்டூரில் உள்ள அபார்ட்மென்டில், 70 வயது பெண், 45 வயது மகளுடன் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தது கிடையாது. யாரிடமும் பேசுவதும் இல்லை. 70 வயது பெண்ணின் கணவர் வங்கியில் செய்த டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியை வைத்து, தாய், மகள் ஜீவிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, வீட்டில் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்ட இவர்கள், உணவு டெலிவரி நிறுவனங்கள் வந்த பின், அதன் மூலம் உணவு ஆர்டர் செய்து கொள்கின்றனர். குப்பை கொட்டுவதற்கு கூட வெளியே வருவதில்லை. டீ கப்கள், உணவு டெலிவரி செய்த கவர்கள், மிஞ்சிய உணவு, குப்பை ஆகிய அனைத்தையும் வீட்டிற்குள்ளேயே போட்டு வைத்துள்ளனர். வீடு குப்பை மேடாக மாறியதால், வீட்டை சுற்றிலும் எறும்புகள், ஈக்கள், பூச்சிகள் மொய்க துவங்கின. பல ஆண்டுகளாக வீட்டில் குப்பை குவித்து வைக்கப்பட்டதால் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தினர் வந்து, கதவை திறக்க கூறினர்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ