உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசை கண்டித்து ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! | 108 Ambulance Workers Protest

அரசை கண்டித்து ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! | 108 Ambulance Workers Protest

4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை! புலம்பும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்! 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும், 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை வேலையில் சேர்க்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8 மணி நேர ஷிப்ட் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியபடி, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 18 ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

செப் 15, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
செப் 16, 2025 11:21

5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. முக்கிய மந்திரி பெருமையோ பெருமை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி