முதல் 2 மதிப்பெண் பெற்றவர்களின் நெகிழ்ச்சி பேட்டி |10th Exam Result | Exam Result | Education
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்தமாக 93.80 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது. இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். அரியலூர் தனியார் பள்ளி மாணவி சோபியா 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்து உள்ளார். தமிழில் 99 மதிப்பெண்ணும் பிற பாடங்களில் சென்டமும் வாங்கி உள்ளார். தஞ்சாவூர் பந்தநல்லூர் அருகே குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சோபியா இவரது தந்தை அரசு பஸ் கண்டக்டர். சோபியாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதே போல் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளி மாணவன் மனிஷ் குமார் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தமிழில் 98 மதிப்பெண் பிற பாடங்களில் சென்டம் வாங்கி உள்ளார். மனிஷ் குமாருக்கு பள்ளியின் தாளாளர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.