பிளஸ் 1 தேர்வில் 92.09 சதவீத தேர்ச்சி | 11th result | Result | Exam | Education
1ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையும் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் இன்று வெளியிட்டார். 8 லட்சத்து 7 ஆயிரத்து 98 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக 92.09 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 91.17 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைத்தது. மாணவிகள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 949 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.13 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் 3 லட்சத்து 39ஆயிரத்து 283 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.70 சதவீதமாக உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 6.43 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்களாக அரியலூர், ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளது. அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3,535 பேர் கணிதத்தில் 1,338 வணிகவியலில் 806 பேர் செண்டம் எடுத்துள்ளனர். தேர்வெழுதிய 9,205 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 8,460 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு 2 மணிக்கு எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.