டார்ஜிலிங்கில் இடிந்த பாலம்: நிலச்சரிவில் சிக்கி பலர் மரணம்.
கடந்த மாதம் டில்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களை மழை வெளுத்து வாங்கியது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலையை ஒட்டி உள்ள மலை பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் Darjeeling, Kalimpong, Cooch Behar, Jalpaiguri, and Alipurduar ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டார்ஜிலிங் மாவட்டத்தில் பாலசோன் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பாலம் இடிந்து விழுந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். முக்கிய சுற்றுலா ஸ்தலங்களாக விளங்கும் சிலிகுரி மற்றும் மிரிக் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியில் செல்ல வழியின்றி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிலிகுரி, மிரிக் சுற்றுலா தலங்களின் முதுகெலும்பாக விளங்கிய இரும்பு பாலம் இடிந்து விழுந்தால் சுற்றுலா தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. டார்ஜிலிங் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் ஆகும். தொடர்மழை காரணமாக இன்று அதிகாலை சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதனால் சில வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனது. நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. #WestBengal #Darjeeling #HeavyRainfall #Landslide #BridgeCollapse #RedAlert #CoochBehar #Jalpaiguri #DisasterResponse #NaturalDisaster #EmergencyServices #Flooding #ClimateChange #SafetyFirst #CommunitySupport #RescueOperations #IndiaWeather