சத்தீஸ்கரில் நக்சல் வேட்டை; பாதுகாப்புப்படை அதிரடி 14 Maoist killed including 2 women Chalapati Jaya
உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை 2026 மார்ச் 31க்குள் ஒழித்துக் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன் சபதம் செய்தார். மாவோயிஸ்ட் வேட்டையில் பாதுகாப்புப்படையினருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அமித் ஷா நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் டார்கெட்டை முடிக்கும் வகையில், பாதுகாப்புப்படையினர் தீவிரமாக மாவோயிஸ்ட்களை வேட்டையாட துவங்கியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் Gariaband கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் கூடி சதி திட்டம் தீட்டுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. சத்தீஸ்கர் போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, கோப்ரா அதிரடிப்படை, ஒடிசா சிறப்பு போலீஸ் படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இணைந்து Mainpur மெயின்பூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்த மாாவோயிஸ்ட்களை இன்று காலை சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் 14 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து எந்திர துப்பாக்கிகள், கண்ணி வெடிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். இந்த சண்டையின்போது கோப்ரா அதிரடி போலீஸ் படையை சேர்ந்த வீரர் ஒருவரும் படுகாயமடைந்தார். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களில் 2 பெண்களும் அடக்கம். ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் ஜெய்ராம் ரெட்டியும் இந்த சண்டையில் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் கூறினர்.