காதலுக்கு இடையூறாக இருந்த தாய்க்கு நேர்ந்த சோகம்! 16 Years Old Girl |Mother Murdered |Telangana
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி. மாநில கலாசார பிரிவில் நாட்டுப்புற பாடகியாக இருக்கிறார். கணவரை பிரிந்த அஞ்சலி தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் மூத்த மகள் தேஜாஸ்ரீக்கு 16 வயதாகிறது. தேஜாஸ்ரீக்கு 8 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் நல்கொண்டாவை சேர்ந்த 19 வயது இளைஞர் பகில்லா சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கணக்கில் போனில் பேசிய தேஜாஸ்ரீயை தாயார் அஞ்சலி கண்டித்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொண்டு தேஜாஸ்ரீ, காதலன் சிவாவுடன் சென்று விட்டார். அஞ்சலி போலீசில் புகார் அளித்து தேஜாஸ்ரீயை மீட்டு வந்தார். இதனால் தனது தாய் மீது தேஜாஸ்ரீ கோபத்தில் இருந்தார். தாயை கொலை செய்து விட திட்டம் தீட்டிய தேஜாஸ்ரீ, இதுகுறித்து தனது காதலன் சிவாவிடம் கூறினாள். அஞ்சலியை கொலை செய்யும் திட்டத்துடன் தனது தம்பி பகில்லா யஷ்வந்தை அழைத்து கொண்டு தேஜாஸ்ரீ வீட்டு சென்றான் சிவா. தேஜாஸ்ரீ, சிவா, யஷ்வந்த் மூவரும் சேர்ந்து துப்பட்டாவால் அஞ்சலியின் கழுத்தை நெரித்தனர். மயங்கிய அஞ்சலிக்கு கை, கால்களில் அசைவு இருந்தது. வீட்டில் இருந்த மசாலா அரைக்கும் சிறிய உரலை கொண்டு தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தனர். வீட்டில் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் அஞ்சலியை கொலை செய்த 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 16 வயது சிறுமி காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.