9 மாநிலங்களில் 19.75 வாக்காளர்கள்: எஸ்ஐஆர் பணிக்கு பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
#SIR| ECI| TNelection2026| Election| Tamilnadu| Gujarat| MadhyaPradesh| Westbengal| bihar| கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன், அங்கு எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இரட்டை பதிவு, நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தோர், இறந்தவர்கள் என, மொத்தம் 65 லட்சம் பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. ஆட்சேபனைகள் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டு, அதன் மீதான விசாரணைக்கு பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, புதுச்சேரி, குஜராத், ராஜஸ்தான், லட்சத்தீவு உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி துவங்கியது. இந்நிலையில், தமிழகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் தவிர, 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.