உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு களமிறங்கும் திமுக! 2026 Election | DMK | MK Stalin

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு களமிறங்கும் திமுக! 2026 Election | DMK | MK Stalin

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருக்கிறது. தற்போது கூட்டணியில் நீடிக்கும் கட்சிகளை வைத்தே, வரும் சட்டசபை தேர்தலையும் எதிர்கொள்வது என தி.மு.க. முடிவெடுத்துள்ளது. அதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தேர்தல் பணிகளை ஒதுக்கி இருக்கிறார். ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்கள் பகுதியில் 30 சதவீத வாக்காளர்களை, தி.மு.க. பக்கம் கொண்டு வருவதற்காக களமிறக்கப்பட்டு உள்ளனர். அதற்காக, ஓரணியில் திரள்வோம் என்ற பெயரில், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் ஸ்டாலின். ஐந்து ஐந்து மாவட்டங்களாக பிரித்து, அனைத்து மாவட்டச் செயலர்களையும், நிர்வாகிகளையும் சென்னை அறிவாலயத்துக்கு அழைத்து பேசி வருகிறார். அதோடு 234 தொகுதிகளிலும் கட்சி நிலையை அறிய, நான்கு சர்வே டீம்களையும் களத்தில் இறக்கியுள்ள ஸ்டாலின், அதன் அடிப்படையில் கட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மாவட்டந்தோறும் நேரடியாகவே சென்று, மக்கள் நலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும், முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுமாக இருக்கிறார்.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை