வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாரதத் தபால் துறைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அதன் அயராத ஊழியர்களுக்குப் பாராட்டுக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக நாங்கள் தபால் துறையின் அரும் சேவையைப் பயன்படுத்து வருகிறோம். இன்று வரை ஒரே ஒரு முறை கூட அவர்கள், "நீங்கள் கேட்கும் இந்த இடத்திற்கு எங்கள் சேவை இல்லை" என்று சொன்னதே இல்லை பாரதத்தின் பல மாநிலங்களுக்கும் நாங்கள் தபால் தொடர்பு வழியாக மட்டுமே பொருட்களையும் புத்தகங்களையும் பாடங்களையும் இன்றுவரை அனுப்பி வருகிறோம். வட கிழக்கு எல்லைப் புற மாநிலங்களைப் போன்ற ஒரு சில இடங்களைத் தவிர எங்கும் எங்கள் தபால்கள் குறித்த நேரத்தில் சென்றடைத்து வருகின்றன. எளிய கட்டணங்களுடன் பாரதத்தின் மலைப் பகுதிகள், ராஜஸ்தானின் பாலைவனங்கள், எல்லைப்புறங்களில் காடுகள் என்று சந்து பொந்தெல்லாம் தபால் சேவை கிடைக்கிறது. தபால் சேவையைத் தவிர, நாம் பயணம் போகும் போதும் அவர்கள் உதவுகிறார்கள். பயணம் போன இடத்தில் வழி தெரியாவிட்டால் அருகில் இருக்கும் தபால் நிலைய ஊழியரைக் கேட்டால் போதும் உடன் வந்து வழி காட்டுகிறார்கள். இன்றும் கூடப் பல கிராமங்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு வந்த தபால்களைப் படித்துக் காட்டி உதவும் தபால்காரர்கள் இருக்கிறார்கள் ஆனால் தபால் துறையின் எளிய கட்டணங்களைப் போல் நான்கைந்து மடங்கு கட்டணம் வாங்கும் தனியார் பார்சல் சேவைகள் ஏறத்தாழ முப்பது சதவீதக் கிராமப் புறங்களை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை அந்தக் கிராமப் புறங்களுக்கு வரும் தபால்களையும் பார்சல்களையும் அந்தத் தனியார் தபால் சேவை ஆட்களே, அருகில் உள்ள தபால் நிலையத்தில் மறுபடியும் தந்து பட்டுவாடா செய்ய வைக்கிறார்கள். அப்போதெல்லாம் நமக்கு இரட்டைச் செலவு. வாழ்க நம் தபால் துறையும் அதன் ஊழியர்களும் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்