உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 'நீதித்துறையில் ஊழல் இருப்பதை மறுக்க முடியாது' High court| HC| Karuppu Movie| Karuppu Case

'நீதித்துறையில் ஊழல் இருப்பதை மறுக்க முடியாது' High court| HC| Karuppu Movie| Karuppu Case

நீதித்துறையில் ஊழல் இருப்பதை மறுக்க முடியாது High court| HC| Karuppu Movie| Karuppu Case| Court Verdict| Rj Balaji கருப்பு திரைப்படம், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அதற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வாதிடும்போது, கருப்பு படத்தில், நீதித்துறை மற்றும் வக்கீல்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நீதிபதி லஞ்சம் வாங்குவது போல சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதை கோர்ட் அவமதிப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் உத்தரவில், நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்தனர்; இருக்கவும் செய்கின்றனர். நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை. நீதித்துறையில் ஊழல் நிகழ்வுகளை அறிவோம்; எதிர்கொண்டும் இருக்கிறோம். இது போன்ற கருப்பு ஆடுகளை சென்னை ஐகோர்ட் தவறாமல் வெளியேற்றி கொண்டுதான் இருக்கிறது. நெறிமுறையற்ற வக்கீலுக்கும், ஊழல் நீதிபதிக்கும் இடையிலான தீய கூட்டணியை கூறும் கருப்பு திரைப்படத்தில், நீதித்துறை அமைப்பு மிகைப்படுத்தி சித்தரிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். தமிழ் சினிமாக்கள் அப்படித்தான் பார்க்கப்படுகின்றன. தம்மை சூழ்ந்திருக்கும் டஜன் கணக்கான வில்லன்களை, ஹீரோ தனி ஆளாக வீழ்த்துவான்; தமிழ் சினிமாவில் எல்லாமே மிகை உணர்ச்சி கொண்டவை. அதுபோல, கருப்பு படத்தையும் தனித்துவமான படைப்பாகவே பார்க்க வேண்டும். ஒரு கலைஞன் தன் சொந்த வழியில் தன் படைப்பை வழங்கும் உரிமையே கலை சுதந்திரம். கருத்து சுதந்திரம் என்பது ஒருவரின் கருத்தை வாய்மொழி, எழுத்து அச்சு, படம் அல்லது வேறு எந்த வகையிலும் வெளிப்படுத்தும் உரிமை. கருப்பு படத்தில் வரும் ஏழுகிணறு கோர்ட் ஒரு கற்பனை. ஒரு கற்பனையான கோர்ட்டுக்கு தலைமை தாங்கும் நபர் ஊழல்வாதியாக சித்தரிக்கப்படும்போது, அது நீதிமன்ற அவமதிப்பு சட்ட விதிகளின் கீழ் வராது. கற்பனையாக சித்தரிக்கப்பட்ட கோர்ட்டில்தான் ஊழல் என படத்தின் இயக்குநர் கூறியுள்ளாரே தவிர ஓட்டுமொத்த நீதித்துறை அமைப்பையே ஊழல் நிறைந்ததாக சித்தரிக்கவில்லை. படத்தை தடை செய்ய கோரிய வழக்கில் முகாந்திரம் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மே 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ