/ தினமலர் டிவி
/ பொது
/ குடியே குடியை கெடுத்த கொடூரம் | 2 Months baby Dead| Father Killed | Tirupur
குடியே குடியை கெடுத்த கொடூரம் | 2 Months baby Dead| Father Killed | Tirupur
திருப்பூர், பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன செக்யூரிட்டி. மது பழக்கத்துக்கு அடிமையான மணி, போதையில் தினமும் மனைவி சரோஜினியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பும் இதே போல் தகராறு செய்து மனைவியை அடித்துள்ளார். அப்போது, சரோஜினி கையில் வைத்திருந்த அவரது 2 மாத ஆண் குழந்தை கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. பதறிய சரோஜினி, மருத்துவமனைக்கு தூக்கிகொண்டு சென்றார். சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று இறந்தது. சரோஜினி அளித்த புகாரையடுத்து கணவர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆக 17, 2024