உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளையாட சென்ற நண்பர்கள் திரும்பி வராத துயரம் | 3 Childrens Dead | Dip in Water |

விளையாட சென்ற நண்பர்கள் திரும்பி வராத துயரம் | 3 Childrens Dead | Dip in Water |

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், ரம்ஜான் தைக்கால் ஜாகிர் உசேன் நகரை சேர்ந்த முஹிபுல்லாவின் 8 வயது மகன் உபயத்துல்லா; ஜாபர் சாதிக்கின் 10 வயது மகன் முகமது அபில்; சாதிக்கின் 13 வயது மகன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் அதே பகுதியில் அரசு பள்ளியில் படித்தனர். 3 சிறுவர்களும் வெள்ளையங்கால் ஓடையில் குளித்து விளையாடி உள்ளனர். அப்போது வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு நீர் திறக்கப்பட்டதால், சிறுவர்கள் மூவரும் அடித்து செல்லப்பட்டு மூழ்கினர். கரையில் இருந்து இதை பார்த்த சக நண்பர்கள் பெற்றோர்களிடம் கூறினர். கிராம மக்கள் சிறுவர்களை தேடினர் அவர்கள் கிடைக்கவில்லை.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி