ெயல்படாத கட்சிகளை களையெடுத்த தேர்தல் கமிஷன் ECI| 334 Political Parties delisted | National Parties |
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளில், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய ஆறும் தேசிய கட்சிகளாக அங்கீரிக்கப்பட்டுள்ளன. திமுக, அதிமுக, தேமுதிக, மநீம, விசிக உட்பட நாடு முழுதும் 67 கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,854. தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது தவிர கட்சிகளின் பெயர், முகவரி, நிர்வாகிகள் போன்ற விவரங்களை அவ்வப்போது தேர்தல் ஆணையம் சரிபார்ப்பது வழக்கம். அதன்படி, அங்கீகரிக்கப்படாத பட்டியலில் சரிவர விவரங்களை அப்டேட் செய்யாத 345 கட்சிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதில் 11 கட்சிகள் மட்டும் விளக்கம் அளித்தன. விளக்கம் தராத 334 கட்சிகளின் பெயர்களை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. இதனால், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2520 ஆக குறைந்தது.