ஒலிம்பிக் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா ஏமாற்றம்
பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் போட்டியில், இந்தியாவின் இரண்டு அணிகளும் தகுதி சுற்றிலேயே வெளியேறின. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பைனலுக்கு செல்லும். இந்தியாவின் ரமிதா -அர்ஜுன் ஜோடி 6வது இடமும், இளவேனில் வாலறிவன்-சந்தீப் ஜோடி 12வது இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறின. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும்தான் கடும் போட்டி நிலவியது. சீனாவின் ஹுவாங் யுடிங்- ஷெங் லிஹாவ் ஜோடி தங்கத்தை சுட்டது. தென்கொரியா வெள்ளியையும், கசகஸ்தான் வெண்கல பதக்கத்தையும் வென்றன.
ஜூலை 27, 2024