உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தண்ணீர் பைப்புக்குள் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுவன் | 3Yrs Old Boy Dead | Dip in Tank | Karur

தண்ணீர் பைப்புக்குள் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுவன் | 3Yrs Old Boy Dead | Dip in Tank | Karur

ராணிப்பேட்டை மாவட்டம், மூலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். கூலி தொழிலாளி. மனைவி புவனேஸ்வரி தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள். இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், விடுமுறையில் இருந்த 11 வயது மூத்த மகன் தினேஷ், 10 வயது தங்கை சுப்ரியாவுடன் அருகில் உள்ள மீன் குட்டையில் குளிக்க சென்றனர். மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த பரமசிவன், வீட்டில் குழந்தைகள் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடினார். மீன் குட்டைக்கு மேலே குழந்தைகளின் துணிகள், செருப்பு கிடந்ததால் குட்டையில் இறங்கி தேடினார். தினேஷ், சுப்ரியா இருவரும் இறந்த நிலையில் மிதந்ததை பார்த்த பரமசிவன் கதறி அழுதார். நெமிலி போலீசார் உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர். இதேபோல் கரூர், சின்ன களத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரின் 3 வயது மகன் தர்ஷித். வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் மகிழன் என்ற மற்றொரு சிறுவனுடன் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி