உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை ஆஸ்பிடலில் நடந்தது என்ன? 4 Month baby | Suspect Dead | Covai

கோவை ஆஸ்பிடலில் நடந்தது என்ன? 4 Month baby | Suspect Dead | Covai

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மனோஜ் குமார். பெயின்டராக இருக்கிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து 4 மாதமாகிறது. குழந்தை பிறக்கும்போதே ஆசனவாய் பிரச்னை இருந்துள்ளது. இதனால் ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் குழந்தையை சேர்த்தனர். ஆபரேசன் செய்ய இருந்த நிலையில் அதற்கு முன்பு குழந்தைக்கு நர்ஸ் ஒருவர் எனிமா கொடுத்துள்ளார். அப்போது டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட 100 மில்லிக்கு பதிலாக 350 மில்லி எனிமா மருந்து கொடுத்ததாகவும், அப்போதே குழந்தை வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர் குழந்தையை ஆபரேசன் தியேட்டருக்குள் கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளார். சிறிது நேரத்தில் வந்தவர் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். எனிமா மருந்து அதிகமாக கொடுத்தே குழந்தை இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டினர் சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததே குழந்தை இறப்புக்கு காரணம் எனக்கூறி பெற்றோர் ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பிடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்த பின்பே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் கூறினர்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை