உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த போலீஸ் | 4 Naxals encounter | Gunfight | Security forces

துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த போலீஸ் | 4 Naxals encounter | Gunfight | Security forces

நக்சல் பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை 4 பேர் என்கவுன்டர் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர், தண்டேவாடா(Dantewada), மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இன்று காலை வரை, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கை துப்பாக்கி, வெடிமருந்து உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில் மாவட்ட ரிசர்வ் படையின் ஹெட் கான்ஸ்டபிள் சன்னு கரம் வீரமரணம் அடைந்தார்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை