இந்தியாவில் ஐபோன் விற்பனையை பெருக்க திட்டம் Apple iPhone | 4 new Apple retail stores in India|
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் தயாரிப்புகளுக்கான சில்லறை விற்பனை நிலையங்களை ஆங்காங்கே திறந்து வருகிறது. இந்தியாவில் 2017ல் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிப்பு துவங்கியது. தொடர்ந்து, கடந்த ஆண்டு மும்பை மற்றும் டில்லியில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கான நேரடி விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்தியாவில் மேலும் 4 சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் i pro 16 மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய நவீன ரக ஐபோன்கள் விரைவில் இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.