உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹1.5 கோடி பணத்துடன் சிக்கிய கடத்தல்காரர்கள் | ₹40 crore narcotics | 9 Arrested | Chennai

₹1.5 கோடி பணத்துடன் சிக்கிய கடத்தல்காரர்கள் | ₹40 crore narcotics | 9 Arrested | Chennai

சென்னையில் இருந்து இலங்கைக்கு மர்ம நபர்கள், மெத்தம்பெட்டமைன் போதை பொருளை கடத்த முயற்சிப்பதாக, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டலத்துக்கு தகவல் கிடைத்தது. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜூன் 11ல், போதை பொருள் கடத்தல் தொடர்பாக, இலங்கையை சேர்ந்த சிறுவன் உட்பட 2 பேர் சென்னையில் பிடிபட்டனர். அவர்களை, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 27 வயது முகமது ரியாசுதீன், போதை பொருள் கடத்தலுக்கு கேடயமாக பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அவர், சென்னையில் பைனான்சியர் போல, ஹவாலா பண பரிமாற்ற கும்பல் தலைவனாக செயல்பட்டு வருகிறார்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ