உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் எதிரொலியால் இடமாற்றம் 57 CEOs | Transferred | Krishnagiri

கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் எதிரொலியால் இடமாற்றம் 57 CEOs | Transferred | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காந்திகுப்பத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5ம்தேதி முதல் 9ம் தேதி வரை என்.சி.சி. பயிற்சி முகாம் நடைபெற்றது. 35 வயதான என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி பள்ளி தாளாளர் சாம்சனிடம் மாணவி கூறியுள்ளார். நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மாணவியை இருவரும் மிரட்டியுள்ளனர். அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை சொல்ல விவகாரம் போலீசுக்கு போனது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி தாளாளர் சாம்சன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் உள்பட 11 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை காட்டுவதாக, கல்வியாளர்கள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை