ஆஸ்பிடலை முற்றுகையிட்டு சிறுமியின் உறவினர்கள் வாக்குவாதம்! 6 Years Old Girl | Periyar Nagar Hospital
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது 6 வயது மகள் பாவனா 1ம் வகுப்பு படிக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பு பாவனாவுக்கு பள்ளியில் இடது கால் முட்டியில் அடி பட்டுள்ளது. பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீக்கம் அதிகமாக இருந்ததால் வலி தாங்க முடியாமல் பாவனா அழுது கொண்டே இருந்தாள். பெற்றோர்கள் அருகே உள்ள பெரியார் நகர் அரசு ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். அஞ்சும்படி எதுவுமில்லை என கூறி விட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பெற்றோர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்று விட்டு, சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதிகாலையில் சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரியார் நகர் ஆஸ்பிடலில் சேர்த்தனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் இறப்புக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனை தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் ஆஸ்பிடலை முற்றுகையிட்டனர். முதல்முறை வந்த போதே ஒழுங்காக பரிசோதித்திருந்தால் சிறுமி இறந்திருக்க மாட்டாள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.