தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணற இதுதான் காரணம் |7 Days baby dead |Tiruvarur
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கொல்லுமாங்குடியை சேர்ந்த சுகுமாரன் பாத்திமாமேரி தம்பதிக்கு 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து ஆஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த பாத்திமாமேரி, குழந்தைக்கு வழக்கம்போல் தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது திடீரென மூச்சு திணறிய குழந்தை மயங்கி உள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொல்லுமாங்குடி விஏஓ மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் பேரளம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணம் குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் முகமது நாசர் விளக்கம் அளித்தார்.