சர்ச்சை பேச்சை தவிர்க்கும் ஆ.ராசா! A Raja | DMK | Nilgiris | Election 2024
ஹிந்து மதத்தையும், அதன் தெய்வங்கள் மற்றும் பண்பாட்டையும் கேலி, கிண்டல் பேசி வரும், ஆ.ராசா சமீப நாட்களாக அடக்கி வாசிக்கிறார். தான் போட்டியிடும் நீலகிரி தொகுதி மட்டுமல்லாது, பெரம்பலூர் தொகுதியில் அருண் நேருவுக்காகவும், சிதம்பரத்தில் திருமாவளவனுக்காவும் பிரசாரம் செய்து வருகிறார். இதில் ஹிந்து மதத்தை விமர்சிப்பதை விட்டு விட்டு, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளுகிறார். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.
ஏப் 11, 2024