உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், மகனுக்கு போலீஸ் வலைவீச்சு | A+ rowdy | problem with people | police ar

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், மகனுக்கு போலீஸ் வலைவீச்சு | A+ rowdy | problem with people | police ar

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல A+ கேட்டகிரி ரவுடி மேத்யூ. இவர் மீது 7 கொலை வழக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் எருமையூர் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி வீட்டில் தங்கி திருட்டு மண் எடுப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என சட்டத்திற்கு புறம்பாக மக்களை அச்சுறுத்தும் பல தொழில்களை செய்து வந்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மோகன், மகன் ராஜு இருவரும் ரவுடி மேத்யூவின் அனைத்து சட்ட விரோத காரியங்களுக்கும் துணையாக இருந்து வந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு ரவுடி மேத்யூ தனது கூட்டாளிகளான பழந்தண்டலம் செந்தமிழ்ச்செல்வன், கருணாகரன் ஆகிய A கேட்டகிரி ரவுடிகளுடன் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் மூக்கு முட்ட மது குடித்துள்ளனர். பிறகு அதே ஊரில் நடந்த சுப நிகழ்வுக்கு சென்று போதையில் வம்பிழுத்து அங்கிருந்த பெண் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர். அதோடு கேள்வி கேட்ட பலரையும் தாக்கி, நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரகளை செய்துள்ளனர். ரவுடிகளின் அட்டகாசத்தால் பலரும் அடி உதை வாங்கியதில் ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுப நிகழ்ச்சியில் வசூலான மொய் பணத்தையும் ரவுடிகள் பிடுங்கி சென்றதாக சொல்லப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி மேத்யூ, அவனது கூட்டாளிகள் மீது சோமங்கலம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். போலீசார் எருமையூர் சென்று விசாரித்தபோது, இவர்கள் மூவரால் ஊரே கதி கலங்கி நிற்பது தெரிந்தது. 3 பேரையும் உடனடியாக கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 4 பட்டா கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர். பெண் வன்கொடுமை, கள்ளத் துப்பாக்கி வைத்திருத்தல் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவருக்கும் உடந்தையாக இருந்த எருமையூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மோகன், மகன் ராஜு ஆகியோரை சோமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து வலை வீசி தேடுகின்றனர். அதோடு எருமையூர் கிராமத்தில் புகார் அளித்தவர்கள் வீடுகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தி கிராமம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எருமையூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஜூலை 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை