விஜய் கண்டிப்பால் ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியீடு! Aadhav Arjuna | Vijay | TVK | EPS | Annamalai
த.வெ.க. சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் 30ம் தேதி நடந்தது. விழா ஏற்பாடுகளை, த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது இருவரும் பேசிக் கொண்ட வீடியோ பரவியது. ஆனந்திடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, அண்ணாமலையாவது 10 பேரை கூட வைத்துக் கொண்டு, தேர்தலில் நின்று 18 சதவீத ஓட்டு வாங்கினார். அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமியை நம்பி, எவனும் கூட்டணிக்கு வருகிற மாதிரி தெரியவில்லை என, கிண்டலடித்தார். ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு அ.தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சு நடந்து வரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜயும், வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக, ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்துள்ளார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் தனிப்பட்ட உரையாடல் வீடியோ, பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதை தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் என் பொதுவாழ்வில் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு, அது நன்கு தெரியும்.