/ தினமலர் டிவி
/ பொது
/ ஆதவ் உயிருக்கு ஆபத்தா? சுற்றி சுற்றி வந்த மர்மம் விலகியது | Aadhav Arjuna | TVK
ஆதவ் உயிருக்கு ஆபத்தா? சுற்றி சுற்றி வந்த மர்மம் விலகியது | Aadhav Arjuna | TVK
ஆட்டோ, திமுக கொடி கட்டிய கார்! ஆதவ் வீட்டை சுற்றி நடந்தது என்ன? வெளியான போலீஸ் ரிப்போர்ட் நடிகர் விஜயின் தவெக கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா. இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்துாரி ரங்கன் ரோட்டில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனா வீட்டை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். தி.மு.க., கொடி கட்டிய காரும் வந்துள்ளது. இதனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என வக்கீல் மோகன் பார்த்தசாரி, தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18, 2025