கட்சியை உடைக்க சதி என ஆம் ஆத்மி பகீர் குற்றசாட்டு! | AAP | Delhi Assembly election | Bjp
டில்லி சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜவுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் இதை ஏற்க ஆம் ஆத்மி மறுத்து வருகிறது. இந்த சூழலில் ஆம் ஆத்மியின் மூத்த நிர்வாகியும் எம்பியுமான சஞ்சய் சிங் டில்லியில் இது தொடர்பாக பேசினார். ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஏழு எம்எல்ஏக்களுக்கு பாஜவினர் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். பாஜவில் இணைந்தால் 15 கோடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். இனி இது போல் அழைப்பு வந்தால் ஆடியோ ரெக்கார்டு செய்து புகார் அளிக்க எங்கள் எம்எல்ஏக்களிடம் கூறி உள்ளோம். நேரில் சந்திக்க இருந்தால், ரகசிய கேமரா மூலம் அதனை பதிவு செய்யவும் அறிவுறுத்தி உள்ளோம். ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே பாஜ தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் செய்ததைப் போல் டில்லியிலும், கட்சியை உடைக்க முயற்சி செய்கிறது என்றார். யார் யாரிடம் பேரம் நடந்தது என்ற விவரத்தை வெளியிட சஞ்சய் சிங் மறுத்துவிட்டார்.