பருவமழை சமயத்தில் ஆவின் டிலைட் பால் உற்பத்தி நிறுத்தம் | Aavin delite milk | Production stopped
அவசர காலத்தில் உதவும் 3 மாதம் கெடாத ஆவின் பால் உற்பத்தி நின்றதால் மக்கள் ஏமாற்றம் தமிழக அரசின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் சார்பில் தினமும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை கொழுப்பு சத்து அடிப்படையில் பிரித்து ஆரஞ்ச் பச்சை நீலம் பிங்க் நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது. ஊதா நிறத்தில் பசும் பால் விற்பனையும் நடக்கிறது. இது இல்லாமல் பச்சை வெள்ளை நிறம் கலந்த பாக்கெட்டில் 90 நாட்கள் கெடாத ஆவின் டிலைட் பால் 2022 நவம்பரில் அறிமுகமானது. இதை பிரிட்ஜில் வைக்காமல் திறந்தவெளியில் வைத்தே பயன்படுத்தலாம். பாலில் பாக்டீரியாக்கள் முழுதும் நீக்கப்பட்டதாலும் 7 லேயர் பாலிதின் பயன்படுத்தி பாக்கெட் உருவாக்கப்பட்டதாலும் பால் கெடுவதில்லை. இந்த பால் பாக்கெட் தயாரிக்க சோழிங்கநல்லுார் பால் பண்ணையில் தினமும் ஒரு லட்சம் லிட்டர் பேக்கிங் செய்யும் திறன் உடைய கட்டமைப்பு வசதிகள் பல கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டன. இந்த பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு 8.5 சதவீதம் மற்ற சத்துக்கள் இருக்கும். தொலைதுார பயணம் செல்வோருக்கும் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும் இந்த பால் பாக்கெட் பெரிதும் உதவும் என்றும் ஆவின் நிறுவனம் கூறியது.