உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பால் பாக்கெட்ட மாமூலா எடுக்கும் டிரைவர்களால் பறிபோகும் ஆவின் முகவர்கள் வருமானம் | Aavin Milk

பால் பாக்கெட்ட மாமூலா எடுக்கும் டிரைவர்களால் பறிபோகும் ஆவின் முகவர்கள் வருமானம் | Aavin Milk

பால் பாக்கெட்ட மாமூலா எடுக்கும் டிரைவர்களால் பறிபோகும் ஆவின் முகவர்கள் வருமானம் | Aavin Milk leakage issue | Aavin mugavar issue | Milk bribe ஆவின் பால் முகவர்களின் பால் விநியோகத்தில் தினசரி ஒரு பால் பாக்கெட் விக்கெட் ஆவதால் வருமானம் இழக்கும் ஆவின் பால் முகவர்கள். ஆவின் கோல்ட் பால் விலை 18 ரூபாய் உயர்த்தியும் கமிஷனை 2 ரூபாயை குறைத்து வயிற்றில் அடிப்பதாக வேதனை. பால் பாக்கெட்டில் லீக்-ஆல் வருமானம் வீக் ஆகி கொண்டு செல்கிறது என முகவர் சங்கத்தினர் ஆவேசம். லீக் ஆகும் ஆவின் பால் பாக்கெட்டை மண்டல அலுவலகங்களிலேயே மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வரிசைகட்டி மனு கொடுத்தாலும் விஷயம் நடந்த பாடில்லை என ஆதங்கம்.

டிச 31, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saravanan Jagadeesa
டிச 31, 2025 22:06

நான் மதுரையில் ஆவின் முகவராக உள்ளேன் எனது பூத் நம்பர் 22 14 எனது பூத்திருக்கு எனக்கு வரும் இரண்டு பாக்கெட்டுகள் விக்கெட்டாக எடுக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் லீக்கேஜ் ஆக வருகிறது அதை மாற்றி தர மறுக்கிறார்கள் பலமுறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இதுவரை எடுபடவில்லை ஒரு நிறுவனத்தை எப்படி சீர்குலைக்க வேண்டும் என்பதை மதுரை ஆவின் நிர்வாகிகள் இடம் தெரிந்து கொள்ளலாம்


Saravanan Jagadeesa
டிச 31, 2025 21:47

நான் ஆவின் முகவர் தான் தினந்தோறும் ஒன்று ஒன்றிலிருந்து மூன்று பாக்கெட்டைகளுக்கு மேல் லீக்கேஜ் வரத்தான் செய்கிறது அதை மாற்றி தர மறுக்கிறார்கள் இது பல ஆண்டு காலமாகவே நடந்திருக்கின்றே இருக்கிறது அதேபோல டிரைவர்கள் இரண்டு பாக்கெட்டுகள் தினந்தோறும் எடுத்துக் கொள்கிறார்கள் ஆவின் நிர்வாகம் எதைப் பற்றியும் கண்டு கொள்வதில்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை