உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஏசி மின்சார புறநகர் ரயில் சேவையில் மாற்றம் | AC Electric train | Service increased | Chennai

சென்னை ஏசி மின்சார புறநகர் ரயில் சேவையில் மாற்றம் | AC Electric train | Service increased | Chennai

சென்னை புறநகர் மின்சார ரயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து சென்னை சிட்டிக்குள் வந்து செல்லும் பல ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 240க்கும் மேற்பட்ட சேவைகள் இரு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டுகின்றன. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இதுவரை ஏசி வசதி இல்லாத நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 19ம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கட்டணம் மற்றும் ரயில் சேவை நேரம் பயனளிக்கும் வகையில் இல்லை என பயணிகளிடம் இருந்து புகார் எழுந்தது. அதாவது, இந்த ஏசி புறநகர் ரயில் கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படுகிறது. பின்னர் கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு செங்கல்பட்டுக்கும், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரைக்கும் இயக்கப்பட்டது. இரவு நேர ரயில் சேவையாக கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. பீக் நேரங்களில் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் முன்வைத்தனர். அதை ஏற்று ஏசி மின்சார ரயில் சேவையின் நேரத்தை மாற்றி அமைக்க ரயில்வே முன்வந்துள்ளது. அதேபோல சேவைகளின் எண்ணிக்கையும் 8 ஆக உயர்த்தியுள்ளது.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை