/ தினமலர் டிவி
/ பொது
/ பண்ருட்டி அருகே பயங்கர விபத்து: உருக்குலைந்த மினி வேன் | Accident | Panruti | Police
பண்ருட்டி அருகே பயங்கர விபத்து: உருக்குலைந்த மினி வேன் | Accident | Panruti | Police
கடலூர், பண்ருட்டி அடுத்த மருங்கூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது டிராக்டரில் முந்திரி விறகு ஏற்றிக்கொண்டு குறிஞ்சிப்பாடி- வெங்கடாம்பேட்டை ரோட்டில் சென்றார். அதே திசையில் நாற்று நடும் பணிக்காக கூலித் தொழிலாளர்கள் மினி வேனில் வந்தனர். பணிக்கன் குப்பம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டது. கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
ஜூலை 05, 2026