உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சை அருகே கோர விபத்தில் 4 பேருக்கு சோகம் | Accident | Thanjavur

தஞ்சை அருகே கோர விபத்தில் 4 பேருக்கு சோகம் | Accident | Thanjavur

மோதிய வேகத்தில் நசுங்கிய கார், வேன் தஞ்சையில் கோர விபத்து; 4 பேர் மரணம் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா கிளம்பினார். காலை கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை நோக்கி காரில் புறப்பட்டார். கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலையில் உதாரமங்கலத்தில் கார் விபத்துக்குள்ளானது. வயலில் இருந்து நாற்று ஏற்றிய மினி வேன் ரோட்டில் ஏறும் போது கார் அதன் மீது மோதி இருக்கிறது. இதில் இரண்டு வாகனமும் முன் பக்கம் உருகுலைந்து போனது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டிவந்த குமார், அவரது மனைவி ஜெயா, நீலவேணி, துர்கா ஆகியோர் ஸ்பாட்டில் இறந்தனர். குமார் மகள் மோனிஷா, மகன் ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகனம் டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி