உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடுமுறை நாளில் ஸ்பெஷல் கிளாஸ்! | School Van | Van Accident | Sivaganga | Investigation

விடுமுறை நாளில் ஸ்பெஷல் கிளாஸ்! | School Van | Van Accident | Sivaganga | Investigation

சிவகங்கை இடையமேலூர் அருகே தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று அரசு விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதாக கூறப்படுகிறது. மாணவர்களை அழைத்து வந்த பள்ளி வேன் கோமாளிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. டிரைவர் எத்திராஜ், வயது 65 நிகழ்வு இடத்திலேயே இறந்தார். 5, 6 ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் மற்றும் ஒரு உதவியாளர் காயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுமுறை அன்று மாணவர்களை அழைத்துச் சென்றது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

செப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை